ஒன்றிய அமைச்சர் நிர்மலா சீதாராமனை சந்தித்த நிலையில், அண்ணாமலையை நேற்று தனியார் கல்லூரியில் சீமான் சந்தித்துப் பேசினார். இதனால் அவர் பாஜ கூட்டணியில் செல்வாரா அல்லது பாஜ உத்தரவுப்படி தனது தேர்தல் வியூகத்தை வகுப்பாரா என்ற பரபரப்பு எழுந்துள்ளது.
அதற்காக பெரியார், அண்ணா, கலைஞர் ஆகியோரையும் தாக்கத் தொடங்கினார். இதனால் அவர் பாஜ ஆதரவாளராகவே மாறிவிட்டார் என்று அவரது கட்சியினரே பேசத் தொடங்கியதோடு தமிழகத்தில் பல இடங்களில் கட்சியை கூண்டோடு கலைத்து விட்டு மாற்று கட்சிகளில் இணையத் தொடங்கினர்.
இந்த நிகழ்ச்சிக்கு முன்னதாக கல்லூரியில் உள்ள ஒரு அறையில் இருவரும் பேசியதாக கூறப்படுகிறது. இந்த பேச்சுவார்த்தைக்குப் பிறகே இருவரும் ஒன்றாக மேடை ஏறினர். அந்த நிகழ்ச்சியில், அண்ணாமலை சீமானைப் புகழ்வதும், சீமான் அண்ணாமலையை புகழ்வதும் ஒன்று ஒருவரை ஒருவர் புகழ்ந்து தள்ளினர். இந்த இரு நிகழ்ச்சிகள் மூலம் அவர் பாஜ ஆதரவாளர் என்பது உறுதிப்படுத்தப்பட்டதாக அவரது ஆதரவாளர்களே ஆச்சரியத்துடன் பார்க்கத் தொடங்கிவிட்டனர். இதனால் பாஜ கூட்டணியில் சீமான் இணைவாரா அல்லது அவர்களது உத்தரவுப்படி தனது தேர்தல் வியூகத்தை வகுப்பாரா என்ற பரபரப்பு அரசியல் வட்டாரத்தில் எழுந்துள்ளது.