இரண்டாம் உலகப்போரில் ஜெர்மனியை வீழ்த்தி வெற்றி பெற்றதன் 80ம் ஆண்டு நிறைவை குறிக்கும் வகையில் ரஷ்யாவில் மே 9ம் தேதி வெற்றி கொண்டாட்டங்கள் நடைபெறுகின்றது.
இதில் கலந்து கொள்ள வேண்டும் என்று அதிபர் விளாடிமிர் புடின் பிரதமர் மோடிக்கு அழைப்பு விடுத்துள்ளார்.
மே 9ம் தேதி நடைபெறும் அணிவகுப்பில் இந்திய பிரதமரை மாஸ்கோ எதிர்பார்க்கிறது என்றும் இதற்கான அழைப்பு ஏற்கனவே அனுப்பப்பட்டுவிட்டதாகவும் ஊடகங்களில் செய்திகள் வெளியாகி உள்ளன.