அமெரிக்கா அணுசக்தி குறித்த பேச்சை தொடங்கிய நிலையில் , அமெரிக்காவின் பேச்சானது புத்திசாலித்தனமானவை அல்லது கவுரமானது இல்லை என்று ஈரான் தலைவர் அயத்துல்லா அலி காமேனி தெரிவித்துள்ளார். ஈரான் மீது அதிக அழுத்தத்தை கொடுக்கும் நிர்வாக உத்தரவில் செவ்வாயன்று அதிபர் டிரம்ப் கையெழுத்திட்டார். மேலும் அவர் தனது சமூக வலைதள பதிவில் ஈரான் அமைதியாக வளரவும் செழிக்கவும் அனுமதிக்கும் சரிபார்க்கப்பட்ட அணுசக்தி அமைதி ஒப்பந்தத்தை நான் அதிகம் விரும்புகிறேன் என்று குறிப்பிட்டு இருந்தார்.

America and Iran”: This book traces the complex story of US-Iran relations over three centuries – The Dispatch

நாம் உடனடியாக வேலை செய்யத்தொடங்க வேண்டும். மேலும் அது கையெழுத்திடப்பட்டு முடிக்கப்படும்போது ஒரு பெரிய கொண்டாட்டத்தை நடத்த வேண்டும் என்றும் குறிப்பிட்டு இருந்தார். அதிபர் டிரம்ப், ஈரானின் அணுசக்தி ஒப்பந்தம் குறித்து பேசிய நிலையில், ஈரான் மூத்த தலைவரான அயத்துல்லா அலி காமேனி கூறுகையில்,அமெரிக்காவின் பேச்சானது புத்திசாலித்தனமானவை இல்லை, கவுரவமானதும் இல்லை.

இதுபோன்ற அரசுடன் எந்த பேச்சுவார்த்தையும் இருக்கக்கூடாது. அவர்கள் எங்களைப்பற்றி அறிக்கைகள் வெளியிடுகிறார்கள். கருத்துக்களை வெளிப்படுத்துகிறார்கள் மற்றும் அச்சுறுத்தல்களை வெளியிடுகிறார்கள். அவர்கள் எங்களை அச்சுறுத்தினால் நாங்கள் அவர்களை பதிலுக்கு அச்சுறுத்துவோம். அவர்கள் அச்சுறுத்தல்களின்படி செயல்பட்டால் நாங்களும் நடவடிக்கை எடுப்போம். எங்கள் நாட்டின் பாதுகாப்பை மீறினால் சந்தேகமின்றி நாங்களும் அதேபோல் பதிலளிப்போம்” என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *