வாஷிங்டன்: ஒரேநாளில் ரூ.900 கோடி அளவுக்கு அமெரிக்காவில் முதலீடு ஈர்க்கப்பட்டுள்ளதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பெருமிதம் தெரிவித்துள்ளார். தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் புதிய தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்காக அமெரிக்காவிற்கு சென்றுள்ளார்.

CM Stalin's US visit nets Rs 900 crore investments to Tamil Nadu on the  first day | India News - News9live

இந்நிலையில், சான் பிரான்சிஸ்கோவில் இன்று நடந்த முதலீட்டாளர்கள் மாநாட்டில் பல நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தாகி உள்ளது. இது தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டு இருப்பதாவது;

சான் பிரான்சிஸ்கோவில் முதல் நாள், அடுத்த நாட்களுக்கு ஒரு நம்பிக்கைக்குரிய தொனியை அமைத்துள்ளது!

சென்னை, கோயம்புத்தூர், மதுரை மற்றும் செங்கல்பட்டு ஆகிய இடங்களில் ரூ.900 கோடிக்கும் அதிகமான பாதுகாப்பான முதலீடுகள், பல துறைகளில் 4,100 புதிய வேலைகளுக்கு வழி வகுக்கின்றன!

Seeking support for Tamil Nadu's prosperity in US, says CM Stalin | India  News - Business Standard

*நோக்கியா – ரூ.450 கோடி, 100 வேலை வாய்ப்புகள்
*பேபால் – 1,000 வேலைகள்
*ஈல்ட் இன்ஜினியரிங் சிஸ்டம்ஸ் – ரூ.150 கோடி, 300 வேலைகள்
*மைக்ரோசிப் – ரூ.250 கோடி, 1,500 வேலைகள்
*Infinx – ரூ.50 கோடி, 700 வேலைகள்
*அப்ளைடு மெட்டீரியல்ஸ் – 500 வேலைகள்

இன்னும் இரண்டு வாரங்கள் உள்ள நிலையில், இந்த வேகத்தை தொடர்ந்து தீவிரப்படுத்தி, அதிக முதலீட்டாளர்களை தமிழ்நாட்டிற்கு ஈர்த்து, டிரில்லியன் டாலர் பொருளாதாரத்தை நோக்கி எங்கள் பயணத்தை முன்னெடுத்துச் செல்கிறோம்!. இவ்வாறு தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *