ஜப்பான்: ஜப்பானைச் சேர்ந்த நிஹோன் ஹிடாங்க்யோ என்ற அமைப்புக்கு 2024ஆம் ஆண்டுக்கான அமைதிக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது. அணு ஆயுதங்கள் இல்லாத உலகை அடைவதற்கான முயற்சிகளை மேற்கொண்டதற்காக அமைதிக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது.

Nobel Peace Prize 2024: Announcement Of The Nobel Peace Prize, Awarded To  This Japanese Organization - Gondwana University

ஹிரோஷிமா, நாகசாகியில் அணு குண்டால் பாதிக்கப்பட்டோரின் நலனுக்காக நிஹோன் ஹிடாங்க்யோ அமைப்பு தொடர்ந்து பணியாற்றி வந்துள்ளது. 2024 ம் ஆண்டுக்கான நோபல் பரிசுகள் கடந்த திங்கள்கிழமை முதல் அறிவிக்கப்பட்டு வருகின்றன. மருத்துவம், இயற்பியல், வேதியியல், மருத்துவம், இலக்கியம் உள்ளிட்ட துறைகளில் சிறந்து விளங்கியவர்களுக்கு மிக உயரிய விருதான நோபல் பரிசு அறிவிக்கப்படுகிறது.

இதேபோன்று ஆண்டுதோறும் அமைதிக்கான நோபல் பரிசும் அறிவிக்கப்படுகிறது. இந்த ஆண்டு ஜப்பானைச் சேர்ந்த நிஹோன் ஹிடாங்க்யோ என்ற அமைப்புக்கு அமைதிக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது.
Nobel Peace Prize 2024 won by Japan's Nihon Hidankyo for efforts to rid  world of nuclear weapons | CNN
ஜப்பானில் ஹிரோஷிமா, நாகசாகியில் அணு குண்டால் பாதிக்கப்பட்ட மக்களின் நலனுக்காக இந்த அமைப்பு பணியாற்றி வருகிறது. மேலும், அணு ஆயுதங்கள் இல்லாத உலகை நோக்கிச் செல்வதற்காக தொடர்ந்து தனது முயற்சிகளைச் செய்து வருகிறது. அணு குண்டால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவுவதற்காகவே 1956 ஆம் ஆண்டு நிஹோன் ஹிடாங்க்யோ என்ற அமைப்பு உருவாக்கப்பட்டது.

அணு ஆயுதங்கள் மூலம் ஏற்படும் பேரழிவு மற்றும் அதன்மூலம் ஏற்படும் விளைவுகள் குறித்து உலகளாவிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதே இந்த அமைப்பின் நோக்கம்.

இதனை இலக்காக வைத்து தொடர்ந்து பணியாற்றி வருகிறது. நிஹோன் ஹிடாங்க்யோ அமைப்பின் முயற்சிகளுக்கு அங்கீகாரம் கொடுக்கும் வகையில் இந்த ஆண்டின் அமைதிக்கான நோபல் பரிசு அந்நிறுவனத்துக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. ஹிரோஷிமா, நாகசாகியில் அணு குண்டு விசி அடுத்த ஆண்டுடன் 80 ஆண்டுகள் நிறைவடையவுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *