அயோத்தி ராமர் கோயில் கட்டுமானத்தில் மொத்தம் 45கிலோ தங்கம் பயன்படுத்தப்பட்டுள்ளதாக கட்டுமானக்குழுவின் தலைவர் நிருபேந்திரா மிஸ்ரா தெரிவித்துள்ளார். அயோத்தி ராமர் கோயிலின் முதல் தளத்தில் கட்டப்பட்டுள்ள ராமர் தர்பார் உட்பட 8 கோயில்களில் நேற்று முன்தினம் கும்பாபிஷேகம் நடைபெற்றது. இந்நிலையில் ராமர் கோயில் கட்டுமானக் குழுவின் தலைவர் நிருபேந்திர மிஸ்ரா செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், கோயில் கட்டுமானத்தில் 45 கிலோ தூய்மையான தங்கம் பயன்படுத்தப்பட்டுள்ளது.
* வைரம் பதித்த கிரீடம் நன்கொடை
விஷ்வ இந்து பரிஷத்தின் தேசிய பொருளாளர் தினேஷ் நெவாடியா கூறுகையில், ‘‘குஜராத்தை சேர்ந்த புகழ்பெற்ற நகை நிறுவனத்தின் உரிமையாளர் , அயோத்தியில் உள்ள ஸ்ரீராமர் ஜென்மபூரி தீர்த்தஷேத்ரா அறக்கட்டளைக்கு வைரங்கள் பதிக்கப்பட்ட 11 கிரீடங்கள், ஒரு தங்க வில் மற்றும் அம்பு 30கிலோ வெள்ளி, 300கிராம் தங்கம் மற்றும் மாணிக்கங்களை நன்கொடையாக வழங்கியுள்ளார்” என்றார்.