சென்னை: அறப்போர் இயக்கத்திற்கு எதிராக தொடர்ந்த வழக்கு டிசம்பர் 11ஆம் தேதிக்கு சென்னை உயர்நீதிமன்றம் ஒத்திவைத்தது. அறப்போர் இயக்கத்திற்கு எதிராக தொடர்ந்த வழக்கில் எடப்பாடி பழனிசாமி சென்னை உயர்நீதிமன்றத்தில் ஆஜரானார். டெண்டர் முறைகேடு குறித்து கருத்து தெரிவிக்க அறப்போர் இயக்கத்திற்கு தடை கோரி இபிஎஸ் மனுதாக்கல் செய்தார். அறப்போர் இயக்கத்திடம் ரூ.1.10 கோடி நஷ்ட ஈடு கேட்டு எடப்பாடி பழனிசாமி தொடர்ந்த வழக்கில் சாட்சியம் அளிப்பதற்காக உயர்நீதிமன்றத்தில் இபிஎஸ் ஆஜரானார்.
கடந்த அதிமுக ஆட்சியில் முதலமைச்சராக இருந்த போது நெடுஞ்சாலைத்துறையில் ரூ.680 கோடி ஊழல் செய்ததாக எடப்பாடி பழனிசாமி மீது அறப்போர் இயக்கம் குற்றம்சாட்டியிருந்தது. இதனை தொடர்ந்து தன்னைப்பற்றிய அவதூறு பேச்சுக்கு தடை கோரியும், ரூ.1.10 கோடி மானநஷ்ட ஈடு கேட்டும் அறப்போர் இயக்கம் மீது எடப்பாடி பழனிசாமி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து இருந்தார். இதனை தொடர்ந்து இன்று நடைபெற்ற உள்ள வழக்கு விசாரணையில் சாட்சியம் அளிப்பதற்காக உயர்நீதிமன்றத்தில் எடப்பாடி பழனிசாமி ஆஜரானார்.
பொதுவாழ்க்கையில் இருப்பவர்கள் விமர்சனத்தை ஏற்றுக்கொள்ள வேண்டும் என உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ள நிலையில், எடப்பாடி பழனிசாமி குறித்து பேச தடை விதிக்கப்பட்டது உச்சநீதிமன்ற உத்தரவுக்கு எதிரானது எனவும் கூறப்பட்டுள்ளது. மேலும், தன்னுடைய அதிகார வரம்பை தனி நீதிபதி உத்தரவிட்டுள்ளதால் அந்த உத்தரவை ரத்து செய்ய வேண்டுமென கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் மகாதேவன் மற்றும் முகமது ஷஃபிக் அமர்வு, தனி நீதிபதி உத்தரவுக்கு இடைக்கால தடை விதிக்க மறுத்துவிட்டது.
மேலும், மனு குறித்து எடப்பாடி பழனிசாமி தரப்பு பதிலளிக்கவும் நீதிபதிகள் உத்தரவிட்டனர். இந்த வழக்கில் சாட்சியங்கள் விசாரணைக்காக எடப்பாடி பழனிசாமி இன்று சென்னை உயர்நீதிமன்றத்தில் நேரில் ஆஜரானார். இதையடுத்து, வழக்கு விசாரணைக்காக டிசம்பர் 11ஆம் தேதி எடப்பாடி பழனிச்சாமி மீண்டும் நேரில் ஆஜராக வேண்டும் என உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.