தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியின் பதவிக்காலம் விரைவில் முடிவடைய உள்ள நிலையில், பதவிக்காலம் நீட்டிக்கப்பட வாய்ப்புள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
பொதுவாக மாநில ஆளுநராக நியமிக்கப்படுபவர் 5 ஆண்டுகள் அப்பதவியில் இருக்கலாம். அதன்பிறகு, அடுத்த ஆளுநர் நியமிக்கப்படும் வரை அவரது பதவி நீட்டிக்கப்படலாம், அல்லது ஒன்றிய அரசு விரும்பும் பட்சத்தில் ஆளுநராக மீண்டும் நியமிக்கப்படவும் வாய்ப்பு உள்ளது.
இந்த நிலையில், தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியின் பதவிக் காலம் இந்தமாத இறுதியில் நிறைவடைகிறது. அது அதே போல், ஜார்க்கண்ட் ஆளுநர் சி.பி.ராதாகிருஷ்ணன், தெலங்கானா, புதுச்சேரி துணை நிலை ஆளுநர் பதவிகளை கூடுதலாக கவனித்து வருகிறார். தமிழகம், புதுச்சேரி தெலங்கானா உள்ளிட்ட மாநிலங்களுக்கு புதிய ஆளுநர்களை நியமிக்கலாமா என்பது குறித்து ஒன்றிய அரசு பரிசீலித்து வருகிறது. தமிழகத்தை பொறுத்தவரை ஆளுநர் ஆர்.என்.ரவியின் பதவிக்காலம் நீட்டிக்கப்படலாம் என்றே தகவல்கள் தெரிவிக்கின்றன.