வாஷிங்டன்: டெஸ்லா அதிபர் எலன் மஸ்க் மற்றும் இந்திய வம்சாவளி தொழிலதிபர் விவேக் ராமசாமி ஆகியோர் அமெரிக்க அரசின் திறன் துறையை வழிநடத்துவார்கள் என்று அமெரிக்க அதிபராக தேர்தடுக்கப்பட்ட டொனால்ட் டிரம்ப் அறிவித்துள்ளார்.
2025 ஜனவரி அமெரிக்காவின் புதிய அதிபராக பதவியேற்க உள்ள டொனால்ட் டிரம்ப், தனது அரசில் பங்கேற்கவுள்ள அமைச்சர்கள் மற்றும் உயர்மட்ட அதிகாரிகளை தேர்வு செய்து அறிவித்து வருகிறார். அதிபர் தேர்தலில் டிரம்ப் வெற்றிபெற பெரிதும் உதவிய டெஸ்லா அதிபர் எலன் மஸ்க்கிற்கு புதிய அமைச்சரவையில் இடம் அளிக்கப்படலாம் என்றும் பெரிதும் எதிர்பார்க்கப்பட்டது.
அதேபோல டிரம்புக்காக ஜனநாயக கட்சி அதிபர் வேட்பாளர் பட்டியலில் இருந்து விலகிய இந்திய வம்சாவளி தொழிலதிபர் விவேக் ராமசாமியும் டிரம்ப் அமைச்சரவையில் இடம்பெறுவார் என்று கூறப்பட்டது.
இந்நிலையில், தனது அரசின் டி.ஓ.ஜி. எனப்படும் அமெரிக்க அரசின் திறன் துறையை எலன் மஸ்க்கும், விவேக் ராமசாமியும் வழிநடத்துவார்கள் என்று டொனால்ட் டிரம்ப் அறிவித்துள்ளார். ஏற்கனவே தேசிய பாதுகாப்பு ஆலோசகராக மைக்கில் வால்ட்ஸையும், மார்கோ வெளியுறவுத்துறை அமைச்சராகவும், லீ செல்டின் பாதுகாப்புத்துறை அமைச்சராகவும் டிரம்ப் தேர்வு செய்தது குறிப்பிடத்தக்கது.