லக்னோ: அதீத நம்பிக்கையால் தான் உபி.யில் கட்சிக்கு தோல்வி ஏற்பட்டது என முதல்வர் யோகி ஆதித்ய நாத் கூறியுள்ளார்.
மக்களவை தேர்தலில் உபியில் உள்ள 80 தொகுதிகளில் 43 தொகுதிகளை கைப்பற்றி சமாஜ்வாடி-காங்கிரஸ் கூட்டணி பாஜவுக்கு அதிர்ச்சியை கொடுத்தது. பாஜ கட்சி 33 இடங்களை பிடித்தது.
இந்த நிலையில், தேர்தல் தோல்விக்கு பின் உபி மாநில பாஜ செயற்குழு கூட்டம் நேற்று நடந்தது. இதில், பேசிய முதல்வர் ஆதித்யநாத்,‘‘ 2014 மற்றும் 2019 ஆகிய தேர்தல்களில் பெற்றதை போன்றே இந்த தேர்தலிலும் கட்சிக்கு வாக்குகள் கிடைத்துள்ளன.
வாக்குகள் மாற்றம் மற்றும் கட்சி தொண்டர்களின் அதீத நம்பிக்கை ஆகியவையே பாஜ தோல்விக்கு காரணம். முந்தைய தேர்தல்களில் தோல்வியை ஏற்று கொண்ட எதிர்க்கட்சிகள் இப்போது துள்ளிக்குதிக்கின்றன’’ என்றார்.