புதுடெல்லி: ‘உலக மக்கள் தொகையில் 40 பேருக்கு தாய்மொழியில் கல்வி கிடைப்பதில்லை’ என யுனெஸ்கோவின் உலகளாவிய கல்வி கண்காணிப்பு (ஜெம்) குழு அறிக்கையில் தெரிவித்துள்ளது. சர்வதேச தாய்மொழி தினத்தின் 25ம் ஆண்டு நிறைவையொட்டி, ஐநாவின் யுனெஸ்கோ அமைப்பை சேர்ந்த உலகளாவிய கல்வி கண்காணிப்பு குழு ‘மொழிகளின் முக்கியம்: பன்மொழி கல்விக்கான உலகளாவிய வழிகாட்டுதல்’ என்ற தலைப்பில் அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில் கூறப்பட்டுள்ளதாவது:
இதற்கு போதுமான ஆசிரியர் திறன், தாய்மொழியில் வளங்கள் கிடைக்காதது மற்றும் சமூக எதிர்ப்பு ஆகியவை பெரும் சவால்களாக உள்ளன. இடம்பெயர்வுகள் அதிகரிக்கும் போது, பன்மொழி கற்றல் உலகளாவிய யதார்த்தகமாக மாறி வருகிறது. பல்வேறு மொழி பின்னணிகளைச் சேர்ந்த கற்பவர்களை கொண்ட வகுப்பறைகள் மிகவும் பொதுவானவையாகி்றன. எனவே, அனைத்து கற்பவர்களுக்கும் பயனளிக்கும் குறிக்கோளுடன் பன்மொழி கல்வி கொள்கைகள் மற்றும் நடைமுறையை உலக நாடுகள் செயல்படுத்த வேண்டும். இவ்வாறு கூறப்பட்டுள்ளது.