மதுரை, தூத்துக்குடி, திருச்சி, கோவையிலிருந்து சென்னைக்கு வருவதற்கு விமான கட்டணங்கள் பல மடங்கு உயர்ந்துள்ளது. வெளியூர் சென்றவர்கள் விமானங்களில் திரும்புவதால் உள்நாட்டு சென்னை விமான நிலையத்தில் பயணிகள் கூட்டம் அதிகரித்து காணப்படுகிறது. மதுரை- சென்னைக்கு சாதாரண நாட்களில் விமான கட்டணம் ரூ.4,542. இன்று கட்டணம் ரூ.18,127-ஆக உயர்ந்துள்ளது.

Passengers are shocked as the Chennai-Ayodhi flight fare has gone up  several times | சென்னை-அயோத்தி விமான கட்டணம் பல மடங்கு உயர்ந்ததால் பயணிகள்  அதிர்ச்சி

தூத்துக்குடியில் இருந்து சென்னைக்கு விமான கட்டணம் ரூ.4.214ஆக இருந்த நிலையில் ரூ.17,401 ஆக உயர்ந்துள்ளது. திருச்சி- சென்னை இடையே சாதாரண நாட்களில் கட்டணம் ரூ.2,334. இன்றைய தினம் கட்டணம் ரூ.9,164 ஆக உயர்ந்து காணப்படுகிறது. இதனால், விமானப் பயணிகள் மிகவும் சிரமத்துக்கு உள்ளாகியுள்ளனர். பல மடங்கு அதிக விமான கட்டணம் கொடுத்து சொந்த ஊர்களில் இருந்தும் சுற்றுலா தலங்களில் இருந்தும் பயணிகள் பயணித்து வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *