பெங்களூரு: முன்னாள் முதல்வர் எடியூரப்பா மீதான போக்சோ வழக்கு விசாரணைக்குத் தடை விதித்து கர்நாடக உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. முன்னாள் முதல்வர் எடியூரப்பா மீதான போக்சோ வழக்கில், சிஐடி போலீசார் தாக்கல் செய்த குற்றப்பத்திரிகையின் அடிப்படையில் விசாரணை நீதிமன்றம் இவ்வழக்கை விசாரித்து வருவதுடன்ம் தேதி விசாரணைக்கு ஆஜராகுமாறு சம்மன் அனுப்பியிருந்தது. இதற்கிடையே, தனக்கு அனுப்பப்பட்ட சம்மனை ரத்து செய்யக்கோரி எடியூரப்பா, ஒய்.எம்.அருண், ருத்ரேஷ் மற்றும் மாரிசாமி ஆகியோர் தனித்தனி மனுக்களை கர்நாடக உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்தனர்.
அந்த மனுவை விசாரித்த நீதிபதி பிரதீப் சிங் தலைமையிலான அமர்வு, இருதரப்பு வாதங்களையும் கேட்ட பின், போக்சோ வழக்கில் எடியூரப்பா மற்றும் மற்றவர்கள் மீதான விசாரணையை நிறுத்திவைத்தது. விசாரணை நீதிமன்றத்தில் நேரில் ஆஜராவதிலிருந்தும் விலக்கு அளித்து அமர்வு உத்தரவிட்டது. மேலும், இந்த வழக்கில் உயர்நீதிமன்றம் அடுத்த உத்தரவைப் பிறப்பிக்கும் வரையில், போக்சோ வழக்கு விசாரணைக்குத் தடை விதிக்கப்பட்டது.