மாஸ்கோ: ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் இந்தியா நிரந்தர உறுப்பினராக இருக்க வேண்டும் என ரஷ்ய வெளியுறவுத்துறை அமைச்சர் செர்ஜி லாவ்ரவ் வலியுறுத்தியுள்ளார். கடைசியாக, 2021-22-ம் ஆண்டில் நிரந்தரமில்லாத உறுப்பினராக, ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் இந்தியா இடம் பெற்றது.

ஐ.நா.,பாதுகாப்பு கவுன்சில் தேர்தல்: இந்தியாவின் வெற்றி உறுதி'

ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் உள்ள உறுப்பினர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கும்படி பல்வேறு நாடுகள் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இந்த நிலையில் ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் இந்தியா நிரந்தர உறுப்பினராக வேண்டும் என அமெரிக்க அதிபர் ஜோ பைடன் மற்றும் பிரான்ஸ் அதிபர் மேக்ரான் ஆதரவு தெரிவித்துள்ளனர். இவர்களை தொடர்ந்து, கடந்த மாதம் இங்கிலாந்து பிரதமர் கெய்ர் ஸ்டார்மர் இவர்களுடன் இணைந்து கொண்டார்.

The India-Russia Relationship Is Less Than Meets the Eye - WSJ

இந்த நிலையில் ரஷ்ய ஊடகத்திற்கு பேட்டியளித்த அந்நாட்டு வெளியுறவு துறை அமைச்சர் செர்ஜி லாவ்ரவ் : இந்தியா, பிரேசில் போன்ற நாடுகள் மற்றும் ஆப்பிரிக்க பிரதிநிதிகளை, ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் நிரந்தர அடிப்படையில் நீண்ட காலத்திற்கு உறுப்பினர்களாக இருக்க செய்ய வேண்டும். உலக அளவில் பெரும்பான்மையாக உள்ளவர்களின் பிரதிநிதித்துவம் உறுதி செய்யப்பட வேண்டியது அவசியம் என கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *