வாஷிங்டன்: கனடா, மெக்சிகோ, சீன இறக்குமதி பொருட்களுக்கு வரி விதித்து அமெரிக்க அதிபர் டிரம்ப் உத்தரவிட்டுள்ளார். கனடா, மெக்சிகோ பொருட்களுக்கு 25% வரி விதிக்கப்பட்டுள்ள நிலையில் சீனப் பொருள்களுக்கு வர்த்தக கட்டுப்பாடுகள் உள்ளதால், கூடுதலாக 10% வரி விதிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்காவின் 47-வது ஜனாதிபதியாக பதவியேற்றுள்ளடிரம்ப் நிர்வாக ரீதியாக மேற்கொள்ளப்பட இருக்கும் மாற்றங்கள் மற்றும் திட்டங்கள் குறித்து அறிவித்துள்ளார். அந்த வகையில், கனடா மற்றும் மெக்சிகோவில் இருந்து இறக்குமதியாகும் பொருட்களுக்கு 25 சதவீதம் வரி விதிக்கப்படும் என டிரம்ப் அறிவித்துள்ளார். சட்டவிரோத குடியேற்றம் மற்றும் பென்டானில் உள்ளிட்ட போதைப்பொருள் கடத்தல் குறித்த கவலைகளைக் காரணம் காட்டி, கனடா மற்றும் மெக்சிகோவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு 25 சதவீத வரியையும், சீனாவிலிருந்து வரும் பொருட்களுக்கு 10 சதவீத வரியையும் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அறிவித்துள்ளார்.
அமெரிக்கர்களைப் பாதுகாக்க வேண்டியதன் அவசியத்தையும், வாக்குறுதியை நிறைவேற்ற வேண்டியதன் அவசியத்தையும் வலியுறுத்தி, அமெரிக்க அதிபர் சர்வதேச அவசர பொருளாதார அதிகாரச் சட்டத்தின் (IEEPA) கீழ் நடவடிக்கை எடுத்துள்ளார். சட்டவிரோத குடியேற்றம் மற்றும் போதைப்பொருள் கடத்தலால் ஏற்படும் அச்சுறுத்தல்களிலிருந்து அமெரிக்க குடிமக்களைப் பாதுகாக்க இந்த வரிகள் செயல்படுத்தப்பட்டுள்ளதாக டிரம்ப் கூறினார்.