வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் தேர்தல் நவம்பர் மாதம் நடைபெற உள்ளது. ஜனநாய கட்சியின் அதிபர் வேட்பாளராக தற்போதைய அதிபர் ஜோ பைடன் மீண்டும் போட்டியிடுவதாக அறிவிக்கப்பட்டது. இதற்காக அவர் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டார். இந்நிலையில் குடியரசு கட்சியின் அதிபர் வேட்பாளர் டிரம்புடனான நேரடி விவாதத்துக்கு பின் பைடனுக்கான ஆதரவு வெகுவாக குறைந்தது.
மேலும் அவர் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்ட நிலையில் தேர்தலில் இருந்து விலக கோரி அவருக்கு அழுத்தம் கொடுக்கப்பட்டது. இதன் காரணமாக அவர் தேர்தலில் இருந்து விலகியுள்ளார். அவருக்கு பதிலாக ஜனநாயக கட்சி அதிபர் வேட்பாளராக துணை அதிபர் கமலா ஹாரிஸ் போட்டியிடுகின்றார்.
இதன் காரணமாக அக்கட்சியினர் தங்களது வேட்பாளரை முறையாக முடிவு செய்யும் வரை பொதுத்தேர்தல் விவாதத்தை இறுதி செய்ய முடியாது” என்று தெரிவித்துள்ளார். மில்வாக்கியில் நடந்த குடியரசு கட்சியின் மாநாட்டில் அதிபர் வேட்பாளராக டிரம்ப் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டார். இதேபோல் ஆகஸ்ட்டில் சிகாகோவில் நடக்கும் ஜனநாயக கட்சியின் மாநாட்டில் கட்சியின் அதிபர் வேட்பாளராக கமலா ஹாரிஸ் அறிவிக்கப்பட உள்ளார்.