வளசரவாக்கம் காவல் நிலையத்தில் இன்று மாலை 6 மணிக்கு சீமான் ஆஜராக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், தன்னை திருமணம் செய்து கொள்வதாகக் கூறி பாலியல் உறவு வைத்துக்கொண்டு பின்னர் ஏமாற்றியதாக வளசரவாக்கம் போலீசில் நடிகை விஜயலட்சுமி புகார் செய்திருந்தார். இந்த வழக்கை ரத்து செய்யக்கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் சீமான் மனு தாக்கல் செய்திருந்தார். இதையடுத்து வழக்கை விசாரித்த நீதிமன்றம், வழக்கை ரத்து செய்ய முடியாது என்றும்,

அதேப்போன்று 12 வாரத்துக்குள் போலீசார் வழக்கை விசாரித்து முடிக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டிருந்தது. நடிகை விஜயலட்சுமி பாலியல் புகாரில் விசாரணைக்கு சீமான் நேற்று ஆஜராகாததால், அவரது வீட்டு முன்பு போலீசார் நேற்று மீண்டும் இன்று ஆஜராகுமாறு சம்மனை ஒட்டினர். அதை ஊழியர் கிழித்ததால் கைது செய்ய வந்த இன்ஸ்பெக்டரை காவலாளி தாக்கியதோடு, துப்பாக்கியால் சுட முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் வளசரவாக்கம் காவல் நிலையத்தில் இன்று மாலை 6 மணிக்கு சீமான் ஆஜராக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.