அகமதாபாத்: குஜராத்தில் மருந்து தொழிற்சாலையில் இருந்து ரூ.107 கோடி மதிப்பிலான போதைப்பொருளை பயங்கரவாத தடுப்பு படையினர் பறிமுதல் செய்தனர். குஜராத் மாநிலம் ஆனந்த் மாவட்டம் கம்பாட் நகர் அருகே உள்ள மருந்து ஆலையில் அனுமதியின்றி போதைக்காக பயன்படுத்தப்படும் அல்பிரசோலம் மருந்துகள் தயாரிக்கப்படுவதாக குஜராத் பயங்கரவாத தடுப்பு படையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
அதனடிப்படையில் குறிப்பிட்ட தொழிற்சாலையில் பயங்கரவாத தடுப்பு படையினர் நேற்று நடத்திய அதிரடி சோதனையில் ரூ.107 கோடி மதிப்புள்ள 107 கிலோ போதைப்பொருளை பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக 6 பேரை பயங்கரவாத தடுப்பு படையினர் கைது செய்தனர்.