கொல்கத்தாவில் பெண் பயிற்சி மருத்துவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு நீதி கேட்டு உச்சநீதிமன்ற தலைமை நீதிபதிக்கு 55 அமைப்புகள், தனிநபர்கள் 1000 பேர் சேர்ந்து கடிதம் எழுதி உள்ளனர்.

Kolkata doctor rape case: 22 hrs and a rejection later, protesting medics  mail Mamata for meeting 'anytime, anywhere' | Today News

அதில் பாலியல் வன்கொடுமை மற்றும் போலீசாரின் அடக்குமுறைகளை விசாரிக்க சட்ட ரீதியான உத்தரவுகள் பிறப்பிக்கப்பட வேண்டும் என்று தலைமை நீதிபதிக்கு வேண்டுகோள் விடுத்துள்ளனர். தேசிய பணிக்குழு அமைப்பில் மாற்றம் செய்து அதில் மருத்துவர்களை சேர்க்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

பாலியல் குற்றவாளிகளை கண்டுபிடித்து கைது செய்து, உச்சபச்ச தண்டனை வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட 9 முக்கிய கோரிக்கைகள் இடம்பெற்றுள்ளன. மருத்துவத்துறையில் நிலவும் ஊழல்கள், மோசடிகள் குறித்தும் விசாரிக்கப்பட வேண்டும் என்றும் கடிதத்தில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில் ஆர்.ஜி.கர் அரசு மருத்துவமனையில் இரவுப்பணியின் போது, முதுகலை 2ம் ஆண்டு படித்த பயிற்சி பெண் டாக்டர் பலாத்காரம் செய்யப்பட்டு கொடூரமாக கொல்லப்பட்ட விவகாரத்தில் அம்மாநில ஜூனியர் டாக்டர்கள் கடந்த ஒரு மாதமாக போராட்டத்தை தொடர்ந்து வருகின்றனர்.,

What happened during Kolkata doctor's 'final hours'? | Today News

ஜூனியர் டாக்டர்கள் பணிக்கு திரும்ப வேண்டும், இல்லாவிட்டால் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படுவதை தடுக்க முடியாது என உச்ச நீதிமன்றம் கெடு விதித்தும் போராட்டம் நடைபெற்று வருகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *