சிகாகோ: தமிழ்நாட்டில் ரூ.850 கோடி மதிப்பில் முதலீடுகள் செய்ய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தானது.
முதலமைச்சர் ஸ்டாலின் முன்னிலையில் சிகாகோவில் ரூ.850 கோடி முதலீட்டுக்கான ஒப்பந்தங்கள் கையெழுத்தானது. சென்னை, கோவையில் விஸ்டியன் நிறுவனம் ரூ.250 கோடி முதலீட்டில் மின்னணு உற்பத்தி மையம் நிறுவப்படுகிறது.
காஞ்சிபுரம் மாவட்டத்தில் சென்சார்ஸ் மற்றும் டிரான்ஸ்டியூசர்ஸ் உற்பத்தி மையத்தை நிறுவ ரூ.100 கோடியில் ஒப்பந்தம் கையெழுத்தானது.