சென்னையில் 4 முதல் 5 நாட்கள் மழை இருக்கும் என தனியார் வானிலை ஆய்வாளர் பிரதீப் ஜான் தகவல் தெரிவித்துள்ளார். வங்கக்கடலில் நிலைகொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் இன்று மாலைக்குள் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்த நிலையில், சென்னை பாரிமுனை, எழும்பூர், எம்.ஆர்.சி.நகர், மந்தைவெளி, பட்டினப்பாக்கம்,தேனாம்பேட்டை, சைதாப்பேட்டை, நந்தனம், தியாகராய நகர், அடையாறு உள்ளிட்ட இடங்களில் மழை பெய்து வருகிறது. இந்த நிலையில், மழைக்கான வாய்ப்புகள் குறித்து பிரதீப் ஜான் தகவல் தெரிவித்துள்ளார்.
ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுபெற்றபின் வடகிழக்கு மற்றும் டெல்டா பகுதிகளில் 2 நாட்களுக்கு மழை பெய்யக்கூடும். சென்னையை பொறுத்தவரை 27ஆம் தேதிவரை விட்டுவிட்டு கனமழையும், அதிகனமழைக்கு பெய்யக்கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. காற்றழுத்த தாழ்வு மண்டலம் மெதுவாக நகர்ந்து செல்வதால் நவ.30-ம் தேதி வரை மழை தொடர்ந்து பெய்யும். சென்னையின் நீர்ப்பிடிப்பு பகுதிகளான செம்பரம்பாக்கம், புழல் உள்ளிட்ட பகுதிகளில் மழைக்கான வாய்ப்பு அதிகரித்து காணப்படும். அடுத்த 5 நாட்களுக்கு டிசம்பர் 1 ஆம் தேதி வரை தமிழகம் மற்றும் டெல்டா பகுதிகளில் அதிகனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக தனியார் வானிலை ஆய்வாளர் பிரதீப் ஜான் தகவல் தெரிவித்தார்.