மொகடிஸ்ஷு: சோமாலியாவைச் சேர்ந்த 70 பேர் 2 படகில் ஐரோப்பியாவிற்கு சென்றபோது கடலில் மூழ்கி 24 பேர் உயிரிழந்தனர். கிழக்கு ஆப்பிரிக்காவில் உள்ள நாடு சோமாலியா. இந்நாட்டை சேர்ந்த பலர் பொருளாதார வாய்ப்புகளை தேடி ஐரோப்பாவுக்குள் நுழைய ஆபத்தான கடல்வழி பயணத்தை மேற்கொள்கின்றனர். இந்த பயணத்திபோது விபத்துகள் ஏற்பட்டு உயிரிழப்புகளும் அரங்கேறுகின்றன.
இந்நிலையில், சோமாலியாவை சேர்ந்த 70 பேர் 2 படகுகளில் வாழ்வாதாரத்துக்காக இந்திய பெருங்கடல் வழியாக ஐரோப்பிய நாடுகளுக்கு ஆபத்தான பயணத்தை மேற்கொண்டனர். அப்போது எதிர்பாராத விதமாக 2 படகுகளும் விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 24 பேர் உயிரிழந்தனர். அதேவேளை, விபத்தில் சிக்கிய 46 பேர் உயிருடன் மீட்கப்பட்டனர்.