தங்கத்தின் விலை ஜெட் வேகத்தில் உயர்ந்து வருகிறது. நேற்று பவுன் ரூ.60,440-க்கு விற்பனை செய்யப்பட்டது. 2025ம் ஆண்டு தொடக்கம் முதலே தங்கம் விலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. குறிப்பாக, கடந்த சில நாட்களாக தங்கத்தின் விலை கணிசமாக உயர்ந்து வந்த நிலையில், கடந்த புதன்கிழமை ரூ.60 ஆயிரத்தை கடந்து அனைத்து தரப்பு மக்களுக்கும் அதிர்ச்சியை கொடுத்தது. நேற்று முன்தினம் ரூ.60,200க்கு விற்பனை செய்யப்பட்ட ஆபரண தங்கம் ஜெட் வேகத்தில் உயர்ந்து, நேற்றைய தினம் சவரனுக்கு ரூ.240 உயர்ந்து ரூ.60,440க்கும், கிராமுக்கு ரூ.30 உயர்ந்து ரூ.7,555-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
ஆபரணம் கடந்து வந்த பாதை
தேதி வருடம் விலை
அக்.10 2008 ரூ.10,272
ஆக.18 2011 ரூ.20,032
ஜன.03 2020 ரூ.30,344
ஜூலை.27 2020 ரூ.40,104
மார்ச்.28 2024 ரூ.50,012
ஜன.22 2025 ரூ.60,200
தேதி விலை
19-01-2025 பவுன் ரூ.59,480
20-01-2025 பவுன் ரூ.59,600
21-01-2025 பவுன் ரூ.59,600
22-01-2025 பவுன் ரூ.60,200
23-01-2025 பவுன் ரூ.60,200