கடும் பனிமூட்டம் காரணமாக டெல்லியில் 50-க்கும் மேற்பட்ட விமானங்கள் தாமதமாக இயக்கப்படுகின்றன. கடும் பனிமூட்டம், போதிய வெளிச்சமின்மை காரணமாக டெல்லி இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தில் இன்று காலை பல விமானங்கள் தாமதமாக வந்ததாக அதிகாரி தகவல் தெரிவித்துள்ளார்.
புதுப்பிக்கப்பட்ட விமான தகவல்களுக்கு சம்பந்தப்பட்ட விமான நிறுவனத்தை தொடர்பு கொள்ளுமாறு பயணிகள் கேட்டு கொள்ளப்படுகிறார்கள் என தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.