அமெரிக்காவில் சட்டவிரோதமாக குடியேறியவர்களை வெளியேற்றும் ட்ரம்ப் அரசின் முடிவை கண்டித்து லாஸ் ஏஞ்சலஸ், சான்பிரான்சிஸ்கோ பகுதிகளில் நடைபெற்ற போராட்டத்தில் கலவரம் வெடித்தது.
கடந்த 3 நாட்களாக நடைபெற்று வரும் இந்த போராட்டத்தில் கடைகள், வாகனங்கள், வணிக நிறுவனங்களுக்கு போராட்டக்காரர்கள் தீ வைத்தனர். கலவரத்தை முன்னின்று நடத்திய 100க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்ட நிலையில் கலவரத்தை கட்டுப்படுத்த மேலும் 2,000 பாதுகாப்பு வீரர்கள் குவிக்கப்பட்டுள்ளனர்.