சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.1280 சரிந்துள்ளது. தங்கம் விலை கடந்த 26ம் தேதியில் இருந்து தங்கம் விலை கிடுகிடுவென உயரத் தொடங்கியது.
கடந்த 1ம் தேதி தங்கம் விலை கிராமுக்கு ரூ.60 உயர்ந்து ஒரு கிராம் ரூ.8,510க்கும், பவுனுக்கு ரூ.480 உயர்ந்து, ஒரு பவுன் ரூ.68,080க்கும் விற்பனையானது. இந்த விலை இதற்கு முன்னர் இருந்த அனைத்து அதிகப்பட்ச விலையையும் முறியடித்து புதிய உச்சத்தை கண்டது. தொடர்ந்து ஏப்ரல் 2ம் தேதி தங்கம் விலையில் மாற்றமில்லை. இந்நிலையில், நேற்று ஏப்ரல் 3ம் தேதி தங்கம் விலை அதிரடியாக உயர்வை சந்தித்தது.
அதாவது கிராமுக்கு ரூ.50 அதிகரித்து ஒரு கிராம் ரூ.8,560க்கும், பவுனுக்கு ரூ.400 அதிகரித்து ஒரு பவுன் ரூ.68,480க்கு விற்பனையானது. அதே நேரத்தில் இந்த விலை என்பது தங்கம் விலை வரலாற்றில் அதிகப்பட்ச விலை என்ற புதிய உச்சத்தையும் கண்டது. இந்த நிலையில், ஏப்ரல் 4ம் தேதியான இன்று தங்கம் விலை வீழ்ச்சியை சந்தித்தது. இன்றைய நிலவரப்படி, ஆபரணத் தங்கம் கிராம் ரூ.8,400-க்கும் சவரன் ரூ.67,200-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
ஆபரணத்தங்கம் விலை தொடர்ந்து உயர்ந்து வந்த நிலையில் இன்று ஒரே நாளில் ஒரு கிராம் ரூ.160 சவரனுக்கு ரூ.1280 குறைந்துள்ளது. சென்னையில் சில்லறை வர்த்தகத்தில் வெள்ளி விலை கிராமுக்கு ரூ.4 குறைந்து ரூ.108-க்கு விற்பனையாகிறது. வெள்ளி ஒருகிலோ ரூ.1,08,000க்கும் விற்பனையாகிறது.