டெல்லியில் பிரதமர் மோடி தலைமையில் பொருளாதார விவகாரங்களுக்கான ஒன்றிய அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் 104கி.மீ நீளமுள்ள திருப்பதி-பாகலா-காட்பாடி ஒற்றை ரயில் வழித்தடத்தை மேம்படுத்துவதற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது. இந்த ஒற்றை வழித்தடத்தை ரூ.1332 கோடி செலவில் இருவழித்தடமாக மாற்றுவதற்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
/indian-express-tamil/media/media_files/2025/03/12/EXaJ4OMSWXuycS9Nzx8k.jpg)
ஆந்திரா மற்றும் தமிழ்நாட்டில் உள்ள மூன்று மாவட்டங்களை உள்ளடக்கிய இந்த திட்டத்தின் மூலமாக ரயில்வேயின தற்போதைய வலையமைப்பை மேலும் 113கி.மீ. அதிகரிக்கும். இந்த திட்டத்தின் மூலமாக 400 கிராமங்களுக்கும் மற்றும் சுமார் 14லட்சம் மக்களுக்கான இணைப்பு அதிகரிக்கும். இதேபோல், நீர் மேலாண்மை நவீனமயமாக்கலுக்கு ரூ.1600கோடி மதிப்பீட்டில் ஒன்றிய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.