புதுடெல்லி: 1971ம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பு அடிப்படையில் தொகுதி மறுசீரமைப்பை மேற்கொள்ள வேண்டும் என்று திமுக எம்பி சண்முகம் மாநிலங்களவையில் வலியுறுத்தியுள்ளார். உள்துறை அமைச்சகத்தின் செயல்பாடுகள் குறித்து மாநிலங்களவையில் நேற்று நடந்த விவாதத்தில் திமுக எம்பி எம்.சண்முகம் பேசுகையில்,‘‘ கடந்த 7ம் தேதி உள்துறை அமைச்சர் அமித்ஷா சென்னை வந்திருந்தார். அப்போது, தொகுதி மறுசீரமைப்பால் தமிழ்நாட்டிற்கான தொகுதிகளின் எண்ணிக்கை குறையாது என்று உறுதியளித்தார்.

மாநிலங்களவை தேர்தல் வேட்பாளராக திமுக சார்பில் சண்முகம்  தேர்ந்தெடுக்கப்பட்டதன் பின்னணி!!! | nakkheeran

அமித் ஷாவின் பேச்சு இந்த பிரச்னைக்கு தீர்வு காண்பது என்பதை விட பெரும் குழப்பத்தை ஏற்படுத்தி உள்ளது. தற்போதைய மக்கள் தொகையின் அடிப்படையில் தொகுதிகள் மறுசீரமைக்கப்பட்டால் தங்களுடைய மாநிலத்தில் தொகுதிகளின் எண்ணிக்கை குறைந்து விடும் என்று தென் மாநிலங்கள் அச்சப்படுகின்றன.

மக்களவை உறுப்பினர்கள் பலம் அதிகரிக்கப்பட்டால் பங்களிப்பு உள்ளிட்டவற்றை கணக்கில் கொள்ளும் விகிதாச்சார அடிப்படையில் இதை மேற்கொள்ள வேண்டும். அடுத்த 25 ஆண்டுகளுக்கு 1971 ம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின் அடிப்படையில் தொகுதிகளை நிர்ணயம் செய்ய வேண்டும் ’’ என கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *