சென்னை: விஜய் இடம் புதிதாக எதுவும் இல்லை. நாங்கள் புதிதாக வரும் நபர்களை பார்த்து எப்போதுமே பயப்பட மாட்டோம் என்று பாஜ தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார். தமிழக பாஜ தலைவர் அண்ணாமலை ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் சர்வதேச அரசியல் படிப்பை படிப்பதற்காக லண்டன் சென்றார். 3 மாதத்திற்கு பிறகு அவர் விமானம் மூலம் நேற்று சென்னை வந்தார். அங்கு அவருக்கு பாஜ சார்பில் வரவேற்பு அளிக்கப்பட்டது. அதன்பின்னர் அவர் சென்னையில் இருந்து கோவை புறப்பட்டு சென்றார்.

அண்ணாமலை, Annamalai

முன்னதாக சென்னை விமான நிலையத்தில் அண்ணாமலை அளித்த பேட்டி:

பாஜவில் பாரம்பரிய வழக்கப்படி மூன்று ஆண்டுகளுக்கு ஒரு முறை கட்சியின் கிளை பிரிவில் இருந்து மாநில தலைவர் வரையில் தேர்தலுக்கு பாஜ ஆயத்தம் ஆக்கிக் கொண்டு இருக்கிறது. மூன்று மாதங்களில் தமிழக அரசியலில் பல மாற்றங்கள் நிகழ்ந்துள்ளது. நடிகர் விஜய் அரசியலுக்கு வந்துள்ளார். அவர் மக்களுக்கு நல்லது செய்ய வேண்டும் என்று நினைக்கிறார். அதே நேரத்தில் அவர் நிறைய விஷயங்களை பேசி இருக்கிறார். அதற்கெல்லாம் பாஜ தலைவர்கள் பதில் கூறியிருக்கின்றனர். அவர் ஆக்டீவ் பாலிடிக்ஸ் வரும்போது, அவருடைய கருத்துக்களுக்கு எல்லாம் பாஜ தனது கருத்தை வெளிப்படுத்தும். அவர் அரசியலுக்கு வந்தது மக்களுக்கு மேலும் ஒரு வாய்ப்பு, மற்றொரு சாய்ஸ் கிடைத்திருக்கிறது. எனவே அதை வரவேற்கிறோம்.

உதயநிதி ஸ்டாலின் வேகமாக கட்சியில் வளர்ச்சியை அடைந்துள்ளார். எம்எல்ஏ ஆனார் அதன்பின்பு அமைச்சர் ஆனார் இப்போது துணை முதல்வர் ஆகி இருக்கிறார். அவருடைய செயல்பாட்டையும் பொறுத்திருந்து பார்க்க வேண்டும். உதயநிதி ஸ்டாலின் துணை முதல்வராக இருக்கும்போது நன்றாக செயல்பட்டால் அவரை நிச்சயமாக பாராட்டுவோம்.
விஜய் இடம் புதிதாக எதுவும் இல்லை. திராவிட கட்சிகள் பேசுவதையே அவரும் பேசுகிறார். பாஜ தங்கள் பாதங்களில் வலிமையாக நிற்கிறது. ஆனால் விஜய் திராவிட கட்சிகளுடன் ஒத்துப் போவது போல் தெரிகிறது.

நாங்கள் புதிதாக வரும் நபர்களை பார்த்து எப்போதுமே பயப்பட மாட்டோம். நடிப்பு வேறு அரசியல் வேறு. அரசியலில் எப்போதும் வெளியில் வந்து மக்களிடம் தொடர்போடு இருக்க வேண்டும். அக்டோபர் 28க்கு பின்பு விஜய் எத்தனை முறை வெளியில் வந்துள்ளார்? எனவே எங்களுக்கு எந்த பயமும் இல்லை. ஆனால் திராவிட கட்சிகள் தமிழ்நாட்டில் மூன்றாக பிரிந்து உள்ளன. இதனால் திராவிட கட்சிகளின் ஓட்டுகள் மூன்றாக பிரிந்து விட்டது. ஆனால் தேசிய கட்சியின் ஓட்டு என்பது பாஜவுக்கு அதிகமாக இருக்கிறது. அதனால் விஜய் அரசியலுக்கு வருவதை நாங்கள் வரவேற்கிறோம். அதே நேரத்தில் விஜய்யை கேள்வி கேட்க வேண்டிய நேரத்தில் நாங்கள் கேள்வி கேட்போம்.

சீமான் பாதை தனி, எங்கள் பாதை தனி. ஆனால் நாங்கள் நல்ல நண்பர்களாக இருக்கிறோம். அதே நேரத்தில் அவர் பாஜவை காரசாரமாக விமர்சிக்கிறார். 2026 மிக முக்கியமான சரித்திர தேர்தலாக தமிழகத்தில் அமையப் போகிறது. சீமான், விஜய், பாஜ, திராவிட கட்சிகள், ஆளுமையாக இருந்தவர்கள், ஆளுங்கட்சி எதிர்க்கட்சி எல்லாம் இருக்கின்றன. பாஜ தமிழ்நாட்டில் 2010ம் ஆண்டில் இருந்து இதுவரையில் எட்டு மடங்கு வளர்ந்துள்ளது. பாஜ உறுப்பினர்கள் எண்ணிக்கை ஒரு கோடி என்று டார்கெட் வைத்தனர். இப்போது கிட்டத்தட்ட அதை நெருங்கிக் கொண்டு இருக்கிறோம்.

விஜய்க்கு போன தகவல்.. அண்ணாமலை யாத்திரையில் ஆட்டம் போட்ட மக்கள்  இயக்கத்தினர்.. அப்செட்? என்னாச்சு? | Is Vijay planning to take action  against Makkal Iyakkam members for ...

கடந்த முறை புயல் வந்த போது, பிரதமர் 550 கோடி ரூபாய் தமிழ்நாட்டுக்கு வழங்கினார். இது ஆக்கப்பூர்வமான விஷயம். புயல் வந்த பின்பு வேலை செய்வது வேறு. சென்னை தனது பழைய தன்மையை இழந்து, புயல் பாதையில் மாறக்கூடிய ஒரு பெரிய நகரமாக மாறி இருக்கிறோம். இதை முதல்வர் கண்காணிப்பார், பார்ப்பார் என்று நம்புகிறோம். இவ்வாறு அவர் கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *