டெல்லி: நாடு முழுவதும் 3,885 மருத்துவர்களிடம் நடத்திய ஆய்வில் 46% பேர் பாதுகாப்புக்கு உறுதி இல்லாத சூழலில் பணியாற்றுவது தெரியவந்துள்ளதாக இந்திய மருத்துவர்கள் சங்கம் தகவல் தெரிவித்துள்ளது.
தமிழ்நாட்டைச் சேர்ந்த 430 மருத்துவர்களிடமும் கருத்துகள் கேட்கப்பட்டன; 20 முதல் 30 வயதுள்ள மருத்துவர்களே பாதுகாப்பு குறித்து பெரிதும் கவலை தெரிவித்துள்ளனர். 55% மருத்துவர்களுக்கு மட்டுமே இரவுப் பணியின்போது அறை வசதி தரப்படுகிறது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.