இலங்கை: இலங்கையில் புதிய அதிபரை தேர்வு செய்வதற்கான தேர்தல் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு இடையே நாளை நடைபெற இருக்கிறது. அதிபர் ரணில் விக்ரம சிங் பதவி கால நவம்பர் மதத்துடன் முடிவடைய இருப்பதையொட்டி நாளை அதிபர் தேர்தல் நடைபெற உள்ளது. இதில் ரணில் விக்கிரம சிங், சஜித் பிரேமதாச, அனுர குமார திசநாயக்க, அரியநேந்திரன், நாமல் ராஜபக்சே உள்ளிட்ட 38 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்.
இந்தமுறை பெண் வேட்பாளர்கள் யாரும் போட்டியிடவில்லை. ஆகஸ்ட் மாத மத்தியில் இருந்து நடைபெற்று வந்த தேர்தல் பரப்புரை நேற்று முன்தினம் முடிவுற்ற நிலையில், நாளை வாக்குப்பதிவு நடைபெறுகிறது.
இலங்கை வரலாற்றில் முதன்முறையாக அதிபர் பதவிக்கு 38 பேர் போட்டியிடுவதால் 2அடிக்கு நீளமான வாக்குசீட்டு பயன்படுத்தப்படுகிறது. தேர்தலில் அதிபர் ரணில் விக்ரம சிங்கை, எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச, இடதுசாரி வேட்பாளர் அனுர குமார திசநாயக்க ஆகியோர் இடையே போட்டி நிலவி வருகிறது.
அதிபர் பதவிக்கு வடக்கு, கிழக்கு மாகாண தமிழ் அமைப்புகள் மற்றும் தமிழ் அமைப்புகள் இணைந்து முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் அரியநேந்திரனை பொது வேட்பாளராக களமிறக்கி உள்ளது. இவர்களில் அனுர குமார திசநாயக்காவுக்கு அதிக ஆதரவு இருப்பதாக தேர்தலுக்கு முந்தைய கருத்து கணிப்பு முடிவுகள் தெரிவிக்கும் நிலையில், நாளை இலங்கை அதிபர் தேர்தலில் 1.70 கோடி மக்கள் ஜனநாயக கடமையாற்ற உள்ளனர்.