பழனியில் பஞ்சாமிர்தம் தயாரிக்க முழுக்க முழுக்க ஆவின் நெய்தான் பயன்படுத்தப்படுகிறது என அமைச்சர் சேகர்பாபு விளக்கம் அளித்துள்ளார்.
திருப்பதியில் பிரசாதமாக வழங்கப்பட்டுவரும் லட்டு தயாரிக்க பயன்படுத்தப்படும் நெய்யில் மாட்டு கொழுப்பு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த விவகாரம் பூதாகரமாகியுள்ள நிலையில், திருப்பதி கோவிலுக்கு நெய் விநியோகம் செய்த நிறுவனமே பழனி கோவிலுக்கும் விநியோகித்து வருவதாக தகவல்கள் பரவியது. இதற்கு தமிழக அரசு மறுப்பு தெரிவித்துள்ளது.

தேவைக்கு அதிகமாக நெய் தேவைப்படும்போது தனியார் நிறுவனத்திடம் இருந்து நெய் வாங்கப்படுகிறது. அந்த தனியார் நிறுவனம், தற்போது புகாருக்குள்ளான கிடையாது என்பதை தெரிவித்துக்கொள்கிறேன். பஞ்சாமிர்தம் குறித்து வதந்தி பரப்பிய பாஜவினர் மீது போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. வதந்தி பரப்புவோர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் சேகர்பாபு கூறியுள்ளார்.