இஸ்லாமாபாத்: பாகிஸ்தானின் கராச்சி விமான நிலையம் அருகே நடத்தப்பட்ட வெடிகுண்டு தாக்குதலில், வெளிநாட்டு பயணி உட்பட இருவர் பரிதாபமாக உயிரிழந்தனர். 10க்கும் மேற்பட்டோர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுளனர்.

A massive blast outside Karachi Airport in Pakistan kills two and injures  at least eight

நமது அண்டை நாடான பாகிஸ்தானுக்கு சீனா பல்வேறு உதவிகளை செய்து வருகிறது. அங்கு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. இதற்காக சீனர்கள் பலர் பாகிஸ்தானில் வேலை பார்த்து வருகின்றனர். அவர்களை குறிவைத்து அவ்வபோது பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில், பாகிஸ்தானின் கராச்சி விமான நிலையம் அருகே குண்டு வெடித்தது. இச்சம்பவத்தில் சீனர்கள் 2 பேர் உயிரிழந்தனர். சீனர் உட்பட 10 பேர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர். இந்த குண்டுவெடிப்பு சம்பவம் நேற்று இரவு 11 மணியளவில் நடைபெற்றுள்ளது. வெடிகுண்டு சத்தம் பல கி.மீ., தூரத்திற்கு கேட்டதாக கூறும் மக்கள், அதனால் உண்டான தீப்பிழம்பையும் பார்த்ததாக கூறுகின்றனர். காரில் வைக்கப்பட்ட சக்திவாய்ந்த குண்டு வெடித்ததில் இந்த அசம்பாவிதம் நடந்ததாகவும், பலுசிஸ்தான் விடுதலை இயக்கம் இந்த தாக்குதலை நடத்தி இருக்கலாம் எனவும் முதற்கட்ட தகவல் வெளியாகியுள்ளது.
A Pakistani separatist group claims bombing that killed 2 Chinese near  Karachi airport | AP News

இந்த குண்டுவெடிப்பில் காயமடைந்தவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதனால், விமான நிலையத்தில் வி.ஐ.பி.,க்கள் வந்து செல்லும் பகுதியில் உள்ள வாகனங்கள் சேதமடைந்துள்ளன. இந்த சம்பவத்தில் கொல்லப்பட்ட இருவரும் சீனர்கள் என்று தகவல்கள் கிடைத்துள்ளன. மேலும், இந்த சம்பவத்தை பயங்கரவாதத் தாக்குதல் என்று குறிப்பிட்டு தங்களது கண்டனத்தை சீன வெளியுறவுத்துறை தெரிவித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *