பெங்களூரு: கர்நாடக மாநில காங்கிரஸ் அலுவலகத்தில் தேசிய கொடியை ஏற்றி வைத்து காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே பேசுகையில்,‘‘ இந்தியாவுக்கு சுதந்திரம் பெற்று தந்த காங்கிரஸ் கட்சி நாட்டின் ஒற்றுமைக்காக பாடுபடுகிறது. ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித் ஷா மாநிலங்களவையில் பேசுகையில் எதிர்க்கட்சிகள் கடவுள் பெயரை சொன்னாலாவது சொர்க்கத்தில் இடம் கிடைக்கும் என்று கூறி அம்பேத்கரை அவமதித்துள்ளார்.

மல்லிகார்ஜூன கார்கே இன்று சென்னை வருகை | Mallikarjun Kharge visit chennai  today

இந்த நரகவாசிகள் சுதந்திரத்திற்கும் வளர்ச்சிக்கும் எந்த பங்களிப்பும் செய்யவில்லை. இந்தியாவை உலகின் 3வது பொருளாதாரமாக மாற்ற பாடுபடுவதாக பிரதமர் கூறினார். ஆனால் இந்தியா இன்னும் 5வது இடத்தில் இருந்து நகரவே இல்லை. காங்கிரஸ் ஆட்சியில் இந்தியா 4வது பெரிய பொருளாதார நாடாக இருந்தது. மோடி ஆட்சியில் சிறுபான்மையினர், தலித், பழங்குடியினர் குறிவைக்கப்படுகின்றனர்’’ என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *