பாரிஸ்: பிரான்சில் இருந்து வெளியேறுமாறு ஒசாமா பின்லேடன் மகன் உமர் பின்லேடனுக்கு அந்நாட்டு அரசு உத்தரவிட்டுள்ளது. 2011-ல் ஒசாமா பின்லேடன் கொல்லப்பட்ட பிறகு அவரது இளைய மகன் உமர் ஆப்கன், சூடானில் தஞ்சமடைந்திருந்தார்.

Osama bin Laden's artist son kicked out of France for praising father |  Middle East Eye

ஆப்கன், சூடானில் இருந்து வெளியேற்றப்பட்ட பிறகு 2016 முதல் வடக்கு பிரான்சில் உள்ள நார்மண்ட் பகுதியில் வசித்து வருகிறார். 2016ம் ஆண்டு முதல் வடக்கு பிரான்சில் உள்ள நார்மண்ட் என்ற இடத்தில் ஓவியர், எழுத்தாளர், சமூக சேவகர், தொழிலதிபர் என பல்வேறு துறைகளில் இயங்கி வருகிறார்.

இதனிடையே தீவிரவாத செயல்களுக்கு உமர் பின்லேடன் ஊக்கமளிப்பதாக குற்றச்சாட்டு எழுந்தது. இந்நிலையில் பிரான்சில் இருந்து வெளியேறுமாறு உமர் பின்லேடனுக்கு அந்நாட்டு அரசு உத்தரவிட்டுள்ளது. இது தொடர்பாக பிரான்ஸ் உள்துறை அமைச்சர் புருனே ரீடெய்லியூ கூறுகையில்; உமர் பின்லேடன், சமூக வலைதளங்கள் வாயிலாக மறை முகமாக பயங்கரவாத செயல்களுக்கு ஆதரவு அளிப்பதாக தெரிய வருகிறது.  நாட்டிற்கு ஏற்படும் பின் விளைவுகளை கருத்தில் கொண்டு அவர் நாட்டைவிட்டு வெளியேற வேண்டும்.

Osama bin Laden's artist son barred from returning to France over comments  on terrorism - The Hindu

தேசிய பாதுகாப்பு நலன்களுக்காக பிரான்ஸ் அரசு இந்த முடிவு எடுத்துள்ளது. இதனை நீதிமன்றங்களும் உறுதி செய்துள்ளன. எனவே ஒமர் பின்லேடன் எந்த விளக்கமும் தர வேண்டியதில்லை இவ்வாறு அதில் கூறியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *