பொலிவியாவில் பழங்குடியினர் நிலத்தை ஆக்கிரமித்ததாக கூறி நித்தியானந்தாவின் சீடர்கள் 20 பேர் கைது செய்யப்பட்டனர். பாலியல் வழக்குகளில் சிக்கிய சாமியார் நித்தியானந்தா இந்தியாவில் இருந்து தப்பி சென்று தலைமறைவானார். ஈக்வடார் நாட்டில் தீவு ஒன்று விலைக்கு வாங்கி அதற்கு கைலாசா என்று பெயரிட்டு தனி நாட்டை உருவாக்கி இருப்பதாக அறிவித்தார். இந்த நிலையில், தென் அமெரிக்க நாடான பொலிவியாவில் உள்ள அமேசான் காட்டில் பழங்குடியினரின் பல ஏக்கர் நிலத்தை 1,000 ஆண்டுகளுக்கு நித்தியானந்தா ஒப்பந்தம் போட்டதாக கூறப்படுகிறது.

The Country Was Fake. But Its Land Grab in Bolivia Was Real. - The New York  Times

இதையடுத்து அங்கு சென்ற நித்தியானந்தா சீடர்கள் ஆன்மிக செயல்பாடுகளில் ஈடுபட்டுள்ளனர். இதனை அறிந்த பொலிவியா அரசு, பழங்குடியின மக்களின் நிலத்தை நித்தியானந்தா அபகரிக்க முயன்றதாக கூறி ஒப்பந்தம் செல்லாது என அறிவித்தது. மேலும், அங்கு தங்கி இருந்த நித்தியானந்தா சீடர்கள் 20 பேர் கடந்த சில நாட்களுக்கு முன்பு கைது செய்யப்பட்டனர். இதில் 12 பேர் சீனர்கள், 5 முதல் 7 பேர் இந்தியர்கள் மற்றவர்கள் ஐரோப்பா மற்றும் அமெரிக்காவை சேர்ந்தவர்கள் என்றும் கூறப்படுகிறது. பழங்குடினரிடம் இருந்து ஆக்கிரமித்த நிலத்தை தான் கைலாசா என்று நித்தியானந்தா கூறி வந்ததாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *