சியோல்: தென் கொரியா அதிபர் யூன் சுக் யோல் கடந்த 3ம் தேதி திடீரென நாட்டில் ராணுவ சட்டத்தை அமல்படுத்தினார். அரசுக்கு எதிரான நடவடிக்கைகளால் ராணுவ சட்டத்தை அமல்படுத்தியதாக அவர் கூறிய நிலையில் கடும் எதிர்ப்புகள் கிளம்பியது.

Yoon Suk-Yeol | Facts, History, Family, Impeachment, & Presidency |  Britannica

இதனால் ராணுவ சட்டத்தை சிறிது நேரத்தில் வாபஸ் பெற்றார். இதைத் தொடர்ந்து, பதவிநீக்கம் செய்யப்பட்டுள்ள அவருக்கு எதிராக ராணுவம், காவல்துறை அதிகாரிகளுடன் இணைந்த ஊழல் தடுப்பு குழு கூட்டு விசாரணை நடத்தி வருகிறது. ஆனால் விசாரணைக்கு ஆஜராகுமாறு 3 முறை அழைப்பு விடுத்தும் யூன் ஆஜராகவில்லை. இதனால், அவரை கைது செய்ய வாரண்ட் பிறப்பிக்கக் கோரி விசாரணை அதிகாரிகள் சியோல் மேற்கு மாவட்ட நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *