மேற்கு வங்க மாநில சட்டப்பேரவையில் ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையின்போது ஆயுதப்படைகளின் துல்லியமான தாக்குதல்களை பாராட்டி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதன் மீதான விவாதத்தின்போது பேசிய முதல்வர் மம்தா பானர்ஜி, பஹல்காம் தாக்குதல் ஒன்றிய அரசின் முழுமையான தோல்வி மற்றும் அலட்சியத்தின் விளைவாகும்.
தீவிரவாத தாக்குதல் நடந்த இடத்தில் பாதுகாப்பு படையினரோ அல்லது காவல்துறையினரோ இல்லாதது ஏன்? ஒரு தீவிரவாதி கூட பிடிபடாதது ஏன்? உயர்பாதுகாப்பு மண்டல பகுதியில் இதுபோன்று தாக்குதல் நடந்தது எப்படி? இது உள்நாட்டு பாதுகாப்பில் ஏற்பட்ட மகத்தான குறைபாடாகும்.பாஜ தலைமையிலான ஒன்றிய அரசு நாட்டு மக்களுக்கு பாதுகாப்பை வழங்குவதற்கு தவறிவிட்டதால் ராஜினாமா செய்ய வேண்டும் ” என்றார்.