மறைந்த தொழிலதிபர் ரத்தன் டாடாவின் இறுதிச்சடங்கு விவரங்கள் வெளியாகியுள்ளது. மேலும் யார் யார் இறுதி சடங்கு நிகழ்வில் பங்கேற்க இருக்கிறார்கள் என்கிற விவரமும் வெளியாகியுள்ளது.
டாடா குழுமத்தின் முன்னாள் தலைவர் ரத்தன் டாடா உடல்நலக் குறைவால் காலமானார். அவருக்கு வயது 86. மும்பையில் உள்ள தனியார் மருத்துவமனையான மும்பை பிரீச் கேண்டி மருத்துவமனையில் டாடாவின் உயிர் பிரிந்தது. அவரின் மறைவுக்கு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
இதற்கிடையே, மும்பை பிரீச் கேண்டி மருத்துவமனையில் இருந்து ரத்தன் டாடாவின் உடல் கொலாபாவில் உள்ள அவரது இல்லத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டது. அங்கு அவரது உடலுக்கு குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தினர். தொடர்ந்து பொதுமக்கள் அஞ்சலி செலுத்த வசதியாக அவரது உடல் மும்பையில் உள்ள கலை நிகழ்ச்சிகளுக்கான தேசிய மையமான மும்பை NCPA வளாகத்தில் காலை 10 மணிக்கு கொண்டுவரப்பட்டது.
மாலை 3.30 மணியளவில் அளவில் அவரது உடல் வோர்லி மயானத்துக்கு ஊர்வலமாகக் கொண்டு செல்லப்படுகிறது. இறுதிச் சடங்கில் மத்திய அரசின் சார்பில் உள்துறை அமித் ஷா கலந்து கொள்கிறார்.