லெபனானில் பேஜர்கள் வெடித்து 12 பேர் உயிரிழந்த அதிர்ச்சி அடங்குவதற்குள் வாக்கி டாக்கிகள் மூலம் தாக்குதல் நடத்தப்பட்டு இருப்பது பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளது. வாக்கி டாக்கிகள் வெடித்ததில் 20 பேர் உயிரிழந்த நிலையில், 450க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளனர்.

Hezbollah's Pager explosions: Could smartphones face similar explosive  cyber attacks? - BusinessToday

வாக்கி டாக்கியை தொடர்ந்து வீடுகளில் அமைக்கப்பட்டுள்ள சூரிய மின் உற்பத்தி அமைப்புகளும் வெடித்துள்ளன. ஈரானின் தீவிர ஆதரவாளராக செயல்படும் லெபனானின் ஆயுதம் தாங்கிய ஹிஸ்புல்லா அமைப்பு இஸ்ரேலுக்கு எதிரான போரில் பாலஸ்தீனத்திற்கு ஆதரவாக உள்ளது. காஸாவில் இஸ்ரேல் கடந்த ஆண்டு போர் தொடுத்தது முதல், ஹமாஸ் இயக்கத்தினருக்கு ஆதரவாக இஸ்ரேல் தாக்குதல்களை தொடர்ந்து வருகிறது.

இதனிடையே பேஜர், வாக்கி டாக்கி தாக்குதலுக்கு பின்னணியில் இஸ்ரேலின் உளவு அமைப்பான மொஸாட் உள்ளதாக ஹமாஸ் அமைப்பு குற்றம் சாட்டி உள்ளது. தகவல் தொடர்பு சாதனங்கள் மூலம் நடத்தப்படும் இது போன்ற தாக்குதல்களுக்கு ஈரான் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. மிகப்பெரிய போருக்கான அழைப்பு என்று லெபனான் தெரிவித்துள்ளது.
Death toll in Lebanon pager-explosion attack rises to 12 | Arab News
அதே நேரத்தில் போரில் புதிய அத்தியாயத்தில் உள்ளதாக இஸ்ரேலின் பாதுகாப்பு அமைச்சர் தெரிவித்துள்ளார். பேஜர், வாக்கி டாக்கி மூலம் தாக்குதல் நடத்தப்படுவது போர் நடவடிக்கைக்கான தொடக்க புள்ளி என்று எச்சரித்து ஐ.நா. பொதுச் செயலாளர் அண்டானியோ குட்டரஸ், போரை தடுக்கும் நடவடிக்கைகளில் அனைத்து தரப்பினரும் செயல்பட வேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ளார். இந்த தாக்குதல் காசா மீதான போர் நிறுத்த பேச்சுவார்த்தைக்கு பின்னடைவை தரும் என்று அமெரிக்க வெளியுறவுச் செயலாளர் ஆண்டனி பிலிங்கன் கூறியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *