கேரளா: கேரள மாநிலம் வயநாடு மக்களவைத் தொகுதி இடைத்தேர்தல் வாக்கு எண்ணிக்கை தொடங்கியது. வயநாடு தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளராக பிரியங்கா காந்தி, பாஜக சார்பில் நவ்யா ஹரிதாஸ், கம்யூனிஸ்ட் சார்பில் சத்யன் மெகோரி களமிறங்கினர்.

Priyanka Gandhi Vadra | Biography, Career, Family, & Facts | Britannica

மகாராஷ்டிரா, ஜார்க்கண்ட் சட்டப்பேரவை தேர்தலுடன் நாடு முழுவதும் 13 மாநிலங்களில் காலியாக இருந்த வயநாடு, நந்தண்ட் மக்களவை தொகுதிகள் மற்றும் 48 சட்டப்பேரவை தொகுதிகளிலும் இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டது.

இதில் சிக்கிம் மாநிலத்தில் 2 தொகுதிகளில் வேட்பாளர்கள் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டதால் 46 சட்டப்பேரவை தொகுதிகளில் தேர்தல் நடந்தது. இந்த இடங்களிலும் வாக்குகள் இன்று எண்ணப்பட்டு வருகிறது. வயநாடு மக்களவை தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளராக நிறுத்தப்பட்டு இருந்த பிரியங்கா காந்தி தொடர்ந்து முன்னிலை வகித்து வருகிறார்.
2024 Maharashtra Assembly Polls, Priyanka Gandhi: BJP Flags Waved At Priyanka  Gandhi During Nagpur Roadshow. She Did This

வயநாடு மக்களவை தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் பிரியங்கா காந்தி 2,39,554 வாக்குகள் பெற்று முன்னிலை பெற்றுள்ளார். வயநாடு மக்களவை தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் பிரியங்கா காந்தி 1,57,472 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலை பெற்றுள்ளார்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *