டாக்கா: ஷேக் ஹசீனா ஆட்சியில் போடப்பட்ட நியாயமற்ற ஒப்பந்தங்களை ரத்து செய்வது பற்றி இந்தியாவுடன் விவாதிக்கப்படும் என வங்கதேச இடைக்கால அரசின் உள்துறை ஆலோசகர் லெப்டினன்ட் ஜெனரல் ஜகாங்கீர் ஆலம் சவுத்ரி தெரிவித்தார். வங்கதேசத்தின் எல்லை பாதுகாப்பு படையின்(பிஜிபி) தலைமை அதிகாரி அடுத்த மாதம் 16ம் தேதி டெல்லி வருகிறார்.அப்போது இந்தியாவின் எல்லை பாதுகாப்பு படை(பிஎஸ்எப்) இயக்குனர் ஜெனரல் மற்றும் பாதுகாப்பு படை அதிகாரிகளை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்த உள்ளார்.

கைவிரித்த உலக நாடுகள்.. ஷேக் ஹசீனா இந்தியாவில் இன்னும் எத்தனை நாள் தங்கியிருப்பார்? பெரிய ட்விஸ்ட் | Asylum still not working out: How long will Sheikh Hasina stay in ...

இது தொடர்பாக வங்தேச இடைக்கால அரசின் உள்துறை ஆலோசகர் லெப்.ஜென. ஜகாங்கீர் ஆலம் சவுத்ரி நேற்று பேட்டியளித்தார். அப்போது அவர் கூறுகையில்,‘‘ஷேக் ஹசீனா ஆட்சியின் போது இந்தியாவுடன் செய்து கொண்ட நியாயமற்ற ஒப்பந்தங்கள் குறித்து இந்தியாவுடன் விவாதிக்கப்படும். எல்லை தொடர்பாக போடப்பட்ட ஒப்பந்தங்களை ரத்து செய்வது பற்றி இரு நாடுகளுக்கு இடையே அடுத்த மாதம் நடைபெறும் பேச்சுவார்த்தையின்போது விவாதிக்கப்படும்’’ என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *