சென்னை: இலங்கை சிறையில் இருந்து விடுவிக்கப்பட்ட மயிலாடுதுறை, நாகை, காரைக்காலைச் சேர்ந்த 13 மீனவர்கள் சென்னை வந்தனர்.
இலங்கை கடற்படை துப்பாக்கியால் சுட்டதில் காலில் குண்டு காயம் அடைந்த காரைக்கால் மீனவர் உட்பட 13 மீனவர்கள் நேற்று புதன்கிழமை இரவு ஏர் இந்தியா பயணிகள் விமானத்தில், இலங்கையில் இருந்து சென்னைக்கு அழைத்து வரப்பட்டனர்.