Month: December 2024

முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் மறைவு – தலைவர்கள் இரங்கல் !

ஜனாதிபதி திரவுபதி முர்மு தனது இரங்கல் செய்தியில், ‘‘மன்மோகன் சிங்கின் மறைவு நமக்கு ஏற்பட்ட மிகப்பெரிய இழப்பு. பல்வேறு அரசு பதவிகளை வகித்த அவர், இந்திய பொருளாதாரத்தை சீர்த்திருத்துவதில் பெரும் பங்காற்றி உள்ளார். தேசத்திற்கு அவர் ஆற்றிய பங்களிப்புகள், அவரது மனிதநேயம்,…

” அண்ணாமலை லண்டன் போய்விட்டு வந்த பிறகு என்ன ஆனது என தெரியவில்லை” – விசிக தலைவர் திருமாவளவன் வருத்தம்

கோவை: கோவை விமான நிலையத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் நேற்று அளித்த பேட்டி: அண்ணா பல்கலைக் கழகத்தில் மாணவி ஒருவர் பாலியல் வல்லுறவு செய்யப்பட்டு இருப்பது மிகுந்த வேதனைக்குரியது. உடனடியாக குற்றவாளி கைது செய்யப்பட்டு இருப்பது ஆறுதல் அளிக்கிறது.…

ரஷ்யா சென்ற விமானம் தரையில் மோதி 38 பேர் பலி – முழு விவரம் இதோ.,.

மாஸ்கோ: அஜர்பைஜான் ஏர்லைன்ஸ் விமானம் கஜகஸ்தானின் அக்தாவ் நகரில் அவசரமாக தரையிறங்க முயன்ற போது, தரையில் விழுந்து வெடித்து சிதறியது. இதில் 38 பயணிகள் பலியாகினர். 29 பயணிகள் காயங்களுடன் மீட்கப்பட்டுள்ளனர். பறவை மோதியதில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறால் விபத்து நடந்ததா…

புதிய நாடாளுமன்ற கட்டிடத்துக்கு எதிரே வாலிபர் தீக்குளிப்பு – அதிர்ச்சித் தகவல் !

புதிய நாடாளுமன்ற கட்டிடத்துக்கு எதிரே ரயில்வே பவன் அமைந்துள்ளது. இதனருகே உள்ள பூங்கா நேற்று பிற்பகல் 3.30 மணியளவில் 30 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர் பெட்ரோல் ஊற்றி தீக்குளித்தார். உடலில் தீப்பற்றி எரிந்ததும் அவர் அலறியபடி நாடாளுமன்ற பிரதான நுழைவுவாயிலை…

“நல்லகண்ணுவை வாழ்த்த வரவில்லை; வாழ்த்து பெற வந்திருக்கிறேன்”- முதல்வர் மு.க.ஸ்டாலின் !

சென்னை: முதுபெரும் இடதுசாரித் தலைவர் நல்லகண்ணு 100-வது பிறந்த நாள் (நூற்றாண்டு விழா) விழா சென்னை திநகரில் நடைபெற்றது. சிபிஐ மாநிலச்செயலாளர் முத்தரசன் தலைமையில் நடக்கும் விழாவில் தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின், மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, சிபிஎம் கே.பாலகிருஷ்ணன் உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர்.…

திரையரங்கு பராமரிப்பு கட்டணத்தை உயர்த்தி தமிழக அரசு அரசாணை !

சென்னை: திரையரங்குகளில் கட்டண உயர்வு குறித்து திரையரங்க உரிமையாளர்கள் இன்று விளக்கம் அளிப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தமிழ்நாடு திரையரங்கு உரிமையாளர்கள் சங்கம், சில நாட்களுக்கு முன்பு திரையரங்குகளின் பராமரிப்புக் கட்டணத்தை உயர்த்த வேண்டும் என்று அரசுக்கு கோரிக்கை விடுத்திருந்தது. அதன்படி, திரையரங்கு…

” இலங்கைக்கு இந்தியா நிதியுதவி ” – எவ்வளவு தெரியுமா ? இதோ..

கொழும்பு: கல்வி, சுகாதாரம் உள்ளிட்ட துறைகளில் அபிவிருத்தி திட்டங்களுக்காக இந்தியா ரூ.237கோடி நிதியுதவி வழங்கவுள்ளதாக இலங்கை அறிவித்துள்ளது. இலங்கை சுகாதாரத்துறை அமைச்சர் நளின்டா ஜெயதிசா செய்தியாளர்களிடம் கூறுகையில், இலங்கை-இந்தியா இடையே சமூக பொருளாதார அபிவிருத்தி மற்றும் இருதரப்பு உறவுகளை மேம்படுத்துவதற்கான புரிந்துணர்வு…

எம்ஜிஆரை மோடியுடன் ஒப்பிடுவதா? – அண்ணாமலைக்கு முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கடும் கண்டனம் !

சென்னை: எம்ஜிஆரை மோடியுடன் ஒப்பிடுவதா? என்று பாஜ தலைவர் அண்ணாமலைக்கு முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். சென்னையில் அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் நேற்று அளித்த பேட்டி: ஏழை, எளிய மக்களுக்குக்காக தன்னை முழுமையாக அர்ப்பணித்து கொண்ட தலைவர்…

” கால் மற்றும் SMS-க்கு மட்டும் தனி ரீசார்ஜ் திட்டம் ” – தொலைத்தொடர்பு நிறுவனங்களுக்கு TRAI உத்தரவு !

அடுத்த 30 நாட்களுக்குள் கால் மற்றும் SMS சேவைக்கு தனித்தனியே ரீசார்ஜ் திட்டங்களை அறிமுகம் செய்ய தொலைத்தொடர்பு நிறுவனங்களுக்கு TRAI உத்தரவிட்டுள்ளது. கால் மற்றும் SMS-க்கு மட்டும் தனியே ரீசார்ஜ் திட்டத்தை தொடர்பு நிறுவனங்கள் வழங்க வேண்டும் என TRAI கட்டாயமாக்கி…

அமெரிக்க அதிபர் ஆவாரா எலான் மஸ்க்? – டிரம்ப் அளித்த பதில் !

வாஷிங்டன்: அமெரிக்காவின் அரிசோனா அடுத்த பீனிக்ஸ் நகரில் நடந்த நிகழ்ச்சியில், அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்ட டிரம்ப்பிடம், டெஸ்லா மற்றும் ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனங்களின் தலைவர் எலான் மஸ்க், அமெரிக்க அதிபராக வரவாய்ப்புள்ளதா? என்று கேட்கப்பட்டது. அதற்கு டிரம்ப் அளித்த பதிலில்,’ எலான் மஸ்க் என்னுடன்…