Month: June 2025

“யுபிஐ அறிமுகப்படுத்திய புதிய சேவை” – இனி பணப்பரிவர்த்தனையும் 15 விநாடிகள்தான் !

யுபிஐ அதிவேக சேவையை அறிமுகப்படுத்தி உள்ளதால் எந்த பணப்பரிவர்த்தனையும் 15 விநாடிகளில் முடிந்து விடும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. யுபிஐ மூலம் பணம் செலுத்தும் வசதியை நேற்று முதல் என்பிசிஐ அதிவேகப்படுத்தி உள்ளது. இதன்மூலம் செல்போன் மூலம் பணப்பரிவர்த்தனை அதிவேகமாக நடக்க வழிவகை…

“ஈரான்-இஸ்ரேல் மோதல் எதிரொலி ” – பாக். பலுசிஸ்தானில் பெட்ரோல் தட்டுப்பாடு

ஈரான், ஆப்கானிஸ்தான் எல்லையை ஒட்டி பாகிஸ்தானின் பலுசிஸ்தான் மாகாணம் அமைந்துள்ளது. இங்கு, ஈரான்-இஸ்ரேல் மோதல் காரணமாக, ஈரானில் இருந்து கடத்தப்படும் பெட்ரோல், டீசல் அடியோடு நின்று விட்டது. இதனால் கடத்தல் ஈரான் பெட்ரோலை நம்பி உள்ள பல பெட்ரோல் பங்குகள் மூடப்பட்டுள்ளன.…

“சிறுவனைக் கடத்திய வழக்கில் ஏடிஜிபி ஜெயராமை சஸ்பெண்ட் செய்ய தமிழ்நாடு அரசுக்கு காவல்துறை”!

காதல் திருமண விவகாரத்தில் சிறுவனைக் கடத்திய வழக்கில் கைது செய்யப்பட்ட ஏடிஜிபி ஜெயராமை சஸ்பெண்ட் செய்ய தமிழ்நாடு அரசுக்கு காவல்துறை பரிந்துரைத்துள்ளது. சஸ்பெண்ட் செய்யப்பட்ட பின்னர் ஜெயராமை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த போலீசார் திட்டமிட்டுள்ளனர். சிறுவன் கடத்தப்பட்ட வழக்கில் தொடர்பு இருந்தது தெரிய…

“அகமதாபாத் விமான விபத்து” – 47 பயணிகளின் உடல் அடையாளம் காணப்பட்டது !

அகமதாபாத் விமான விபத்தில் பலியான குஜராத் முன்னாள் முதல்வர் விஜய் ரூபானி உட்பட 47 பயணிகளின் உடல் அடையாளம் காணப்பட்டது. குஜராத் மாநிலம் அகமதாபாத்தின் சர்தார் வல்லபாய் படேல் சர்வதேச விமான நிலையத்தில் இருந்து ஏர் இந்தியா நிறுவனத்தின் போயிங் 787-8…

“அமெரிக்க அதிபர் ட்ரம்பைக் கொல்ல ஈரான் திட்டம்” – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு தகவல் !

ஈரானின் அணு ஆயுதத் திட்டத்துக்கு அச்சுறுத்தலாக ட்ரம்ப் இருப்பார் என்பதால் அவரை கொல்ல திட்டமிட்டுள்ளதாகவும், ஈரான் மூலம் உலகுக்கு ஏற்படும் அணு ஆயுத அச்சுறுத்தலை ஒழிக்கத் தேவையானதை செய்வோம் என இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு தெரிவித்துள்ளார். ஈரானின் தெஹ்ரானில் ஈரானிய இஸ்லாமிய…

“தமிழகத்தில் 10க்கும் மேற்பட்ட மாவட்டங்களில் இன்று மிக கனமழை பெய்யும் ” – சென்னை வானிலை ஆய்வு மையம்

மேற்கு திசையின் காரணமாக தமிழகத்தில் நீலகிரி, கோவை மாவட்டங்கள் உள்பட 10க்கும் மேற்பட்ட மாவட்டங்களில் இன்று கனமழை முதல் மிக கனமழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் ஒருசில இடங்களில் மழை பெய்துள்ளது. காரைக் கால்…

“அமெரிக்கா முழுவதும் பதற்றம் அதிகரிப்பு” – அதிபர் டிரம்ப் நடவடிக்கைக்கு எதிராக 25 நகரங்களில் கலவரம் !

அமெரிக்காவில் சட்டவிரோத குடியேறிகளை வெளியேற்றும் அதிபர் டிரம்ப் நடவடிக்கைக்கு எதிராக அந்த நாட்டின் 25 நகரங்களில் கலவரம் வெடித்துள்ளது. அமெரிக்காவில் சுமார் 1.20 கோடி பேர் சட்டவிரோதமாக தங்கியிருப்பதாக கணக்கிடப்பட்டு உள்ளது. அவர்களை வெளியேற்ற அதிபர் டிரம்ப் அதிதீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டு…

“விபத்துக்களை யாராலும் தடுக்க முடியாது” – உள்துறை அமைச்சர் அமித்ஷாவின் பேச்சுக்கு காங்கிரஸ் கண்டனம் !

விபத்துக்களை யாராலும் தடுக்க முடியாது என்ற உள்துறை அமைச்சர் அமித்ஷாவின் பேச்சுக்கு காங்கிரஸ் கண்டனம் தெரிவித்துள்ளது. அகமதாபாத் விமான விபத்து நடந்த இடத்தை பார்வையிட்ட உள்துறை அமைச்சர் அமித் ஷா, ‘அகமதாபாத்தில் விபத்துக்குள்ளான ஏர் இந்தியா விமானத்தில் எரிபொருள் எரிந்ததால் வெப்பநிலை…

“தமிழர் பகுதியில் வீடுகள் இடிக்கப்பட்டதற்கு கண்டனம்” – டெல்லி முதல்வர் ரேகா குப்தாவுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம் !

தமிழர் பகுதியில் வீடுகள் இடிக்கப்பட்டதற்கு கண்டனம் தெரிவித்து டெல்லி முதல்வர் ரேகா குப்தாவுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். டெல்லியில் குடிசை பகுதி மற்றும் ஆக்கிரமிப்பு ஆகியவற்றை டெல்லி உயர்நீதிமன்றத்தின் உத்தரவின் அடிப்படையில் அரசு கையகப்படுத்தி வருகிறது. இதில் குறிப்பாக தமிழர்கள்…

எலான் மஸ்க்கின் மன்னிப்பை ஏற்றார் அதிபர் டிரம்ப் !

அமெரிக்க அரசின் வரி மற்றும் செலவு மசோதா காரணமாக அதிபர் டிரம்ப்புக்கும், டெஸ்லா நிறுவனர் எலான் மஸ்க்குக்கும் விரிசல் ஏற்பட்டது. ஒருவரையொருவர் குற்றம்சாட்டி, சமூக ஊடகங்கள் மூலம் மோதலில் ஈடுபட்டனர். முக்கியமாக டிரம்ப் அரசு கொண்டு வந்துள்ள ‘பிக் பியூட்டிஃபுல் பில்’…