2026 சட்டமன்றத் தேர்தலை நோக்கியே எங்களது அரசியல் நகர்வு இருக்கும் என தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா தெரிவித்துள்ளார். 2026ல் மாநிலங்களவை சீட் உறுதியாக தருவதாக இபிஸ் கூறியுள்ளார்;
பொறுத்திருந்து பார்ப்போம். 2025ல் தருவதாக சொன்னதை 2026 என்று அறிவித்துள்ளார்கள் அவ்வளவுதான். அதிமுக கூட்டணியில் தேமுதிகவுக்கு மாநிலங்களவை சீட் என்பது ஏற்கெனவே முடிவு செய்யப்பட்டதுதான். மாநிலங்களவை சீட் விவகாரத்தில் பொறுத்திருந்து பார்ப்போம்; பொறுத்தார் பூமி ஆள்வார் என அவர் தெரிவித்தார்.