முக்கிய 8 துறைகளின் வளர்ச்சி, 5 மாதங்களில் இல்லாத அளவுக்கு, கடந்த பிப்ரவரியில் 2.9 சதவீதமாக சரிந்துள்ளது. மொத்தமுள்ள 8 முக்கிய துறைகளில் பல துறைகளின் வளர்ச்சி கடந்த பிப்ரவரியில் பின்னடைவை சந்தித்துள்ளது.

Prime Minister Narendra Modi and Union Home Minister Amit Shah in the state  of Maharashtra to campaign for the assembly elections | नरेंद्र मोदी, अमित  शहा आजपासून राज्यात; पंतप्रधानांच्या ...

நிலக்கரி 1.7 ) சதவீதம் (கடந்த ஆண்டு பிப்ரவரியில் 11.6%), சுத்திகரிப்பு 0.8 சதவீதம் (2.6%), ஸ்டீல் 5.6 சதவீதம் (9.4%), மின்சாரம் 2.8 (7.6%) சதவீதம் மட்டுமே வளர்ச்சி அடைந்துள்ளன. கடந்த ஆண்டு பிப்ரவரியுடன் ஒப்பிடுகையில் இது மிகவும் குறைவு. உரம் 10.2 சதவீதம், சிமெண்ட் 10.5 சதவீதம் உற்பத்தி அதிகரித்துள்ளது.

இந்த 8 துறைகளும் நடப்பு நிதியாண்டில் கடந்த ஏப்ரல் முதல் பிப்ரவரி வரையிலான 11 மாதங்களில் 4.4 சதவீத வளர்ச்சியை எட்டியுள்ளன. முந்தைய ஆண்டு இதே காலக்கட்டத்தில் இது 7.8 சதவீதமாக இருந்தது. இதற்கு முன்பு கடந்த ஆண்டு செப்டம்பரில் 2.4 சதவீத வளர்ச்சி அடைந்திருந்தது என ஒன்றிய அரசு வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *