வாஷிங்டன்: காசா விவகாரத்தில் நான் அமைதியாக இருக்கப்போவதில்லை என அமெரிக்க தேர்தல் அதிபர் வேட்பாளர் கமலா ஹாரிஸ் பிரதமர் நெதன்யாகுவுடனான சந்திப்புக்குப் பின்னர் செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.

How Kamala Harris views the world: From Gaza and Russia to China and India

பாலஸ்தீனம் மீதான தாக்குதல்களை தீவிரப்படுத்தியுள்ள நிலையில் இஸ்ரேல் பிரதமர் நேதன்யாகு நேற்று அமெரிக்கவுக்கு பயணம் மேற்கொண்டு அதிபர் ஜோ பைடன் மற்றும் துணை அதிபர் காமலா ஹாரிஸை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார்.

இந்த பேசுவார்த்தையில் அமைதிக்கான உடன்படிக்கையை ஏற்றுக்கொள்ளும்படி நேதன்யாகுவை பைடன் வலியுறுத்தியதாக வெள்ளை மாளிகை தகவல் தெரிவித்துள்ளது.

மேலும் தற்போது அமெரிக்க அதிபர் தேர்தலில் வேட்பாளராக களமிறங்கியுள்ள கமலா ஹாரிஸ் நேதன்யாகுவிடம் பேசுகையில், காசாவில் கடந்த 9 மாதங்களாக நடந்தவை கொடூரமானது. மக்களின் அவல நிலையையும் கண்டுகொள்ளாமல் இருக்கமுடியவில்லை. அவர்களின் துன்பங்களைப் பொருட்படுத்தாமல் எங்களை நாங்களே மரத்துப்போகச் செய்ய முடியாது.

இவற்றைக் கண்டு நான் அமைதியாக இருக்கமாட்டேன் என்று தெரிவித்துள்ளார். மேலும் பிரதமர் நெதன்யாகுவுடனான சந்திப்புக்குப் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தன்னைத் தற்காத்துக் கொள்ள இஸ்ரேலுக்கு உரிமை இருக்கிறது. அதேவேளையில் காசாவில் மக்கள் சந்திக்கும் துயரத்தை பற்றிய எனது அக்கறையை நெதன்யாகுவிடம் மிகத் தெளிவாக முன்வைத்தேன்.

Kamala Harris' VP Shortlist: Here Are Her Top Contenders

இந்த விஷயத்தில் நான் அமைதியாக இருக்கப்போவதில்லை. இந்த விவகாரத்தில் உணர்ச்சியற்றவர்களாக மாற முடியாது!” இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகுவுடனான சந்திப்புக்குப் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த கமலா ஹாரிஸ் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *