ஆப்கானிஸ்தானில் நர்சிங் உள்ளிட்ட மருத்துவப் படிப்புகளை பெண்கள் பயில தாலிபான் அரசு தடை விதித்ததற்கு, அந்நாட்டு ரஷித் கான் வருத்தம் தெரிவித்து, உத்தரவை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.
கற்றலின் முக்கியத்துவத்தை குர்ஆன் வலியுறுத்துகிறது. ஆப்கன் பெண்கள் தங்களது கல்வி உரிமையை மீட்டெடுத்து நாட்டின் வளர்ச்சிக்கு பங்களிக்க முடியும். அனைவருக்கும் கல்வியை வழங்குவது ஒரு சமூகப் பொறுப்பு மட்டுமல்ல. அது நமது தார்மீகக் கடமை என ரஷித் கான் கூறியுள்ளார்.