அடுத்த 30 நாட்களுக்குள் கால் மற்றும் SMS சேவைக்கு தனித்தனியே ரீசார்ஜ் திட்டங்களை அறிமுகம் செய்ய தொலைத்தொடர்பு நிறுவனங்களுக்கு TRAI உத்தரவிட்டுள்ளது. கால் மற்றும் SMS-க்கு மட்டும் தனியே ரீசார்ஜ் திட்டத்தை தொடர்பு நிறுவனங்கள் வழங்க வேண்டும் என TRAI கட்டாயமாக்கி உள்ளது. தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையமான டிராய் கட்டண விதிகளை திருத்தியுள்ளது. அதன்படி, டேட்டாவை பயன்படுத்தாத வாடிக்கையாளர்களுக்கு, கால் அழைப்புகள் மற்றும் எஸ்.எம்.எஸ்.க்கு தனி திட்டத்தை கட்டாயமாக்க வகை செய்துள்ளது.

Vi Only SMS Pack | Daily SMS Packs | Bulk SMS Packs Benefits

சிறப்பு ரீசார்ஜ் கூப்பன்களில், 90 நாட்களுக்கான வரம்பை நீக்கி, அதை 365 நாட்கள் வரை ட்ராய் நீட்டித்துள்ளது. இந்த நடவடிக்கை, நுகர்வோர் பொதுவாக பயன்படுத்தும் சேவைகளுக்கு பணம் செலுத்த உதவும் என்றும், முதியவர்கள் உட்பட கிராமப்புறங்களில் சில குறிப்பிட்ட வாடிக்கையாளர்களுக்கு உதவும் என்றும் ட்ராய் நம்பிக்கை தெரிவித்துள்ளது. இதன்மூலம், 20 ஆண்டுகளுக்கு முன்பு இருந்தைப்போல், வாடிக்கையாளர்களுக்கு ப்ரீபெய்ட் ரீசார்ஜ்களை ட்ராய் மீண்டும் அறிமுகப்படுத்தியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *